சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட பேமஸ் ஆனவர் கனநாடாவில் வசித்து வரும் ப்ரகதி, பிரபலம் என்றாலே ப்ராளம் தானே. அந்த வகையில் சமீபத்தில் கையில் பீர் கோப்பையுடன் போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் ப்ரகதி. 

அவ்வளவு தான் ப்ரகதியின் ரசிகர்கள் அனைவரும் வரிசைக் கட்டி வர ஆரம்பித்துவிட்டனர். பீர்ல பங்கு கேட்டு இல்ல, ப்ரகதிய திட்ட. நீங்க இப்படி பண்ணலாமா, உங்க குரல் என்ன ஆகுறது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என ஏகப்பட்ட அன்பு கலந்த ஆதாங்கங்கள் கமெண்டஸில் கொட்ட ஆரம்பித்துள்ளது. 

இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவது, லைக்குகளை குவிப்பதற்காக வெரைட்டி போஸ் கொடுப்பது இதெல்லாம் அவர், அவர் இஷ்டம். ஆனாலும் தனது வசீகர குரலால் ரசிகர்களைக் கவர்ந்த ப்ரகதியை அப்படி கைவிட ரசிகர்களுக்கு மனசில்லை. அதனால் தான் அட்வைஸ் பண்ணி திருத்திடலாம்ன்னு களம் இறங்கிட்டாங்க. இனி ப்ரகதி நிலை என்ன ஆகப்போகுதோ...!