சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், நடிகர் விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. முதல் கணவரான அஸ்வினுக்கும், சவுந்தர்யாவிற்கும் பிறந்த மகன் வேத் கிருஷ்ணா. என்னதான் பிசியான அம்மாவாக இருந்தாலும், தனது செல்ல மகன் வேத் செய்யும் குறும்புகளை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை சவுந்தர்யா ரஜினிகாந்த் தவறியதே இல்லை. சமீபத்தில் சவுந்தர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர்  செய்துள்ள வேத்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 

அதில் வீடு முழுவதும் பவுடரை கொட்டி, ABCD எழுதி விளையாடுகிறார் சுட்டி பையன் வேத் கிருஷ்ணா. அதை பார்க்கும் நெட்டிசன்கள் யார் ரத்தம்?, தலைவர் ரத்தம் இல்ல, அப்படி தான் இருக்கும் என கமெண்ட் செய்துள்ளனர். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் பேரன்னா சும்மாவா?... செல்ல மகனின் சுட்டித்தனத்தை... டுவிட்டரில் போட்டோவுடன் பகிர்ந்த சவுந்தர்யா ரஜினிகாந்த்...!

அதில் ஒரு நெட்டிசன் துக்ளக் படிக்கும் குடும்பம்னா இப்படித்தான் இருக்கும்... நைஸ் மேம் என கமெண்ட் அடித்துள்ளார். துக்ளக் 50ம் ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையில் துக்ளக் பத்திரிகை வைத்திருந்தால் அவர்கள் அறிவாளி என குறிப்பிட்டார். அதையே இந்த நெட்டிசன் ஜாடையாக கமெண்ட் அடித்துள்ளார். 

சிலரோ துக்ளக் காரணமோ என்றும், பவர் ஆப் துக்ளக் என்றும் சின்ன குழந்தையின் சேட்டையைக் கூட வெட்கமே இல்லாமல் கலாய்த்துள்ளனர். ஒரு சின்னப் புள்ள ஆசையா எழுதிப் பழகிய புகைப்படத்தை, அதன் அம்மா ஆசை ஆசையாக பதிவிட்டால், அதை பார்த்துவிட்டு இப்படி ஆளாளுக்கு விமர்சிக்கிறார்கள்.