கொரோனா வைரஸ் தொற்றில் தமிழகம் தற்போது வரை இரண்டாம் நிலையில் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவை பரவுவதை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானியர்கள் முதல் வி.வி.ஐ.பி.க்கள் வரை வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: கனவில் கூட கசமுசாவா?.... ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட மீரா மிதுனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!

எப்ப பார்த்தாலும் ஷூட்டிங்கிற்காக பிசியாக பறந்து கொண்டிருந்த திரைத்துறையினர் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த நேரத்தை குடும்பத்தினர் உடன் உருப்படியாக செலவிட்டு வருகின்றனர். ஒரு பக்கம் பிரபலங்களின் பாத்திரம் கழுவுதல், வீடு துடைப்பது, சமையல் வீடியோக்களும், மற்றொரு புறம் டிக்-டக் மற்றும் ஒர்க்அவுட் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. 

இந்நிலையில் பிரபல டி.வி. தொகுப்பாளினியான பூஜா ராமச்சந்திரன் அவரது கணவர் ஜான் உடன் செய்த வித்தியாசமான டிக்-டாக் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முதலில் கறுப்பு, வெள்ளை ஸ்ட்ராப்லெஸ் உடையில் பூஜா ராமச்சந்திரன் நடனமாடுகிறார். அதன் பின்னர் அதே உடையில் ஜான் கொஞ்சம் கூச்சத்துடன் ஆட்டம் போடுகிறார். 

இதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!

இவர் ஏற்கனவே கணவருடன் பிகினி உடையில் இருக்கும் தனது கட்டழகி போட்டோவை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்தார். இப்போது சோசியல் மீடியாவில் இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த டிக்-டாக் ஏற்கனவே சோசியல் மீடியாவில் வைரலானது தான் என்றாலும், இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் தான் ஊரடங்கு முடிவதற்குள் என்ன கன்றாவி எல்லாம் பார்க்க வேண்டி வருமோ என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.