லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜியுடன் "மூக்குத்தி அம்மன்" படத்தில் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க பக்தி படம் என்பதால், "மூக்குத்தி அம்மன்" படத்திற்காக 8 வருடங்களுக்குப் பிறகு நயன்தாரா விரதம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அந்த படத்தில், மெளலி, ஊர்வசி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். நேற்று "மூக்குத்தி அம்மன்" படத்திற்கான பூஜை கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்றது. வழக்கம் போல பூஜைக்கு செல்லாமல் எஸ்கேப் ஆன நயன்தாரா, காதலருடன் தேங்ஸ் கிவ்விங் பார்ட்டி கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  

 

அமெரிக்காவில் காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் நண்பர்களுடன்  நயன்தாரா தேங்ஸ் கிவ்விங் டே கொண்டாடியுள்ளார். அப்போது நயன்தாரா வான்கோழி வறுவலை வைத்து மேஜிக் செய்வது போன்ற குறும்புத்தனமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் "மூக்குத்தி அம்மன் படத்திற்காக விரதம் இருக்குறதா சொன்னாங்களே அது என்னாச்சு" என நயனை வறுத்தெடுத்து வருகின்றனர். 

மேலும் இந்த அறிவிப்பை வெளியிட்ட நம்ம ஆர்.ஜே.பாலாஜி மட்டும் எஸ்கேப் ஆக முடியுமா என்ன. மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன் தாரா உட்பட படக்குழு மொத்தமும் சைவத்திற்கு மாறிவிட்டதாக ஆர்.ஜே.பாலாஜி தான் தகவல் கூறினார். தற்போது ஆர்.ஜே.பாலாஜியை மொய்த்து எடுக்கும் நெட்டிசன்கள், "மூக்குத்தி அம்மன் படத்திற்காக சைவமா மாறிட்டதா சொன்னீங்க" என கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

மேலும் மருத்துவர் பிரியங்கா, ரோஜா ஆகியோர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள செய்தி இந்தியாவை கொதிப்படையச் செய்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் முதல் திரையுல பிரபலங்கள் வரை அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சமயத்தில் இப்படி காதலருடன் ஜாலியாக பார்ட்டி கொண்டாடியுள்ள நயன்தாரா மீது நெட்டிசன்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.