அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் "தனுசு ராசி நேயர்களே". தனுசு ராசிக்காரர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அல்லாடுவதை மையமாக கொண்டு பட எடுக்கப்பட்டுள்ளது. இதில் பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன், யோகிபாபு, டேனியல் அன்னே போப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் யூ-டியூப்பில் வெளியான இப்படத்தின் டீசர் சோசியல் மீடியாவில் வைரலானது.

 

காதல், ரொமாண்டிக், லிப் லாக் என எதற்கும் பஞ்சம் வைக்காமல் இன்றைய இளைஞர்களை உசுப்பேத்தும் விதமாக படத்தின் டீசர் காட்சிகள் இருந்தன. குறிப்பாக ஹீரோயின் நீ சுவேதாவையும் ஒன்னும் பண்ணல, அனிதாவையும் ஒன்னும் பண்ணல என்று ஹீரோவை பார்த்து கேட்பார். உடனே ஹரிஷ் கல்யாண், அவரை கட்டி அணைத்து முத்த மழை பொழியும் சீனுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். 

என்னதான் "தனுசு ராசி நேயர்களே" டீசர் காதலிக்கும் இளைஞர்களை  உற்சாகப்படுத்தினாலும், முரட்டு சிக்கிள்ஸை கொந்தளிக்க வைத்துள்ளது. இதற்கு முன்பு "பியர், பிரேமா, காதல்" படத்திலும் முழுக்க ரொமான்ஸ் மூடில் சுற்றிய ஹரிஷ் கல்யாண், இந்த படத்திலும் ஹீரோயினுடன் மாஸ் எண்டர்டெயின்மெண்ட் கொடுத்துள்ளார். இதனால் காண்டான சில முரட்டு சிக்கிள்கள், ஹரிஷ் கல்யாணை கலாந்து மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர். நடிகர் ஹரிஷ் கல்யாணை மரண பங்கம் செய்து நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.