தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த "பிகில்" திரைப்படம் 4வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இதுவரை 300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ இயக்கிய பல படங்கள் கதை திருட்டு பிரச்னையில் சிக்கி வருகிறது. இதனால் காப்பி பெஸ்ட் இயக்குநருனு பெயர் எடுத்த அட்லீ, 'பிகில்' படத்தில் வரும் காட்சிகளை  பல படங்களில் இருந்து காப்பி அடிச்சதா சர்ச்சைகள் எழுந்தது. இதுபோதாதுன்னு, படத்தின் காட்சிகள் எந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதுன்னு, வீடியோ ஆதாரங்கள் மூலம் நெட்டிசன்கள் நிரூபிச்சிக்கிட்டு வர்றாங்க. 

"பிகில்" படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே அந்த சீன் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிச்சது, இந்த சீன் வைரல் வீடியோவை பார்த்து சுட்டதுன்னு நெட்டிசன்கள் மரண பங்கம் செய்து வருகின்றனர். குறிப்பாக தொலைக்காட்சி இன்டர்வியூ ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசிய வசனத்தை, விஜய்யின் மாஸ் டைலாக்காக மாற்றியதாக வெளியான வீடியோ, விஜய் ரசிகர்களை கொலை வெறியாக்கியது. 

தற்போது படத்தில் இடம் பெற்ற மற்றொரு முக்கியமான காட்சியும் காப்பி பெஸ்ட் தான் என்பதை நெட்டிசன்கள் நிரூபித்துள்ளனர். பிகில் படத்தில் கால்பந்து பயிற்சி அளிக்கும் சீன் ஒன்று வரும். அதில் கோல் அடிக்காத பெண்கள் கால்பந்து மைதானத்தின் இரு கோல் போஸ்ட்டுகளுக்கு இடையே ஓட வேண்டும் என விஜய் தண்டனை கொடுப்பார். 

 

அந்த சீன் "த மிராக்கில் சீசன்" என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நெட்டிசன்கள் ஈவு இரக்கமே இல்லையா அட்லீ என கேள்வி எழுப்பியுள்ளனர்.