கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்ட நடிகை காஜல் அகர்வாலை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
சமீபகாலமாக நடிகை காஜல் அகர்வால் பல படங்களின் வாய்ப்புகளை தவிர்த்து வந்ததால், அவர் கர்ப்பமாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் காஜல் கர்ப்பம் குறித்து இதுவரை அவரது நெருங்கிய வட்டாரத்தை சேர்த்தவர்கள் எந்த ஒரு தகவலும் வெளியிடாமல் இருந்து வந்தது. ஒருவேளை பர்சனல் விஷயம் என்பதால், காஜல் அதனை சீக்ரெட்டாக வைத்துள்ளார் போல என ரசிகர்கள் எண்ணி வந்தனர்.

இப்படி இருக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு இருந்தார். காஜல் அகர்வாலின் இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
ஏனெனில், ஒரு விளம்பரத்தின் மூலம் நடிகை காஜல் தான் கர்ப்பமான செய்தியை வெளியிட்டது தான் நெட்டிசன்களின் இந்த கொந்தளிப்புக்கு காரணம். கர்ப்பத்திலுமா காசு பார்ப்பது என நடிகை காஜலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபகாலமாக நடிகைகள் சிலர் அனைத்தையும் விளம்பர நோக்கிலேயே அணுகி வருகின்றனர். அண்மையில் திருமணம் செய்து கொண்ட விக்கி கவுஷல் - கத்ரீனா கைப் தம்பதி தங்களது திருமண வீடியோவை ரூ.80 கோடிக்கு விற்பனை செய்ததைப் பார்த்து பலரும் ஷாக் ஆனார்கள். இதுதவிர நடிகைகள் சிலர் மதுபானங்களை விளம்பரப்படுத்துவதையும் அதிகமாக பார்க்க முடிகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது இன்னும் என்னவெல்லாம் பண்ண போகிறார்களோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
