பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த வாரம் மக்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்டவர் நடன இயக்குனரும், நடிகையுமான காயத்ரி. 

இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்ற போட்டியாளர்களை சண்டைக்கு இழுத்தும், அவர்களிடம் கீழ் தனமான (எச்சங்க, சேரி பிஹேவியர், செஞ்சிடுவன், ஹேர், கைய கால ஒடச்சிடுவேன்) வார்த்தைகளை பயன்படுத்தியதால், மக்களுக்கு இவர் மேல் இருந்த நல்ல பெயர் பறிபோனது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த காயத்ரி தற்போது மீண்டும் பல நாட்கள் கழித்து ட்விட்டர் பக்கம் வந்துள்ளார். மேலும் ஓவியா ரசிகர்களையும்  ஓவியா ஆர்மியை சேர்ந்தவர்களையும் வெறுப்பேற்றுவது போல, நான் ஒன் மேன் ஆர்மி என ட்விட் செய்துள்ளார்.

இவரின் இந்த ட்விட்க்கு பல நெட்டிசன்கள் இவருக்கு எதிராக பல கேள்விகளை தொகுத்து வருகின்றனர்... " வெளியே வந்ததும் செஞ்சிடுவேன் என்கிறீர்களே செஞ்சிட்டிகளா" "உங்களுக்கு பிக் பாஸ் போய் வந்ததும் பைத்தியம் பிடித்து விட்டது" "பெண் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் நீங்கள்" என வச்சி செய்து வருகின்றனர். 

மேலும், "உங்களுக்கு நீங்களே தான் ஆர்மி ஆரம்பிக்க ஆரம்பிக்க முடியும், உங்கள மாதிரி ஒரு பெண்ணையே மதிக்க தெரியாத ஒருவருக்கு மற்றவர்களா ஆர்மி ஆரம்பிப்பார்கள்" என வளைத்து வளைத்து வறுத்தெடுக்கிறார்கள் வலைதள வாசிகள்.

இன்னும் பலர் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.