ஆர்.ஜே, காமெடி நடிகர், மற்றும் எல்.கே.ஜி. படத்தில் கதாநாயகனாகவும் நடித்த ஆர்.ஜே. பாலாஜி தற்போது, இயக்குனராகவும் அவதாரம் எடுக்க உள்ளார். 'மூக்குத்தி அம்மன்' என்கிற பெயரில் உருவாகும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளார்.

பக்தி படமாக உருவாக உள்ள இந்த படத்திற்காக, நயன்தாரா விரதம் இருந்து வருவதாக, சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

இந்த செய்தி வைரலாக பரவியது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் நயன்தாரா அமெரிக்க தோழிகள் கொடுத்த அசைவ உணவு பார்ட்டியில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் கலந்து கொண்டார்.

இதுகுறித்த சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது. தற்போது இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், ஆர்.ஜே.பாலாஜிக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து அட்வைஸ் செய்து வெறுப்பேற்றி வருகின்றனர்.

 

குறிப்பாக மக்களின் நலன் குறித்து, சமூக கருத்துக்களை அதிகம் பேசும் 'ஆர்.ஜே.பாலாஜி, இந்த சின்ன விஷயத்துக்காக பொய் சொல்லலாமா' என கேட்டு வருகிறார்கள். இதற்கு ஆர்.ஜே.பாலாஜி என்ன சொல்வார் என பொறுத்திருந்து பார்ப்போம்.