தல அஜித் நடிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. பாலிவுட் திரையுலகில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து வெற்றி பெற்ற,  'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டிருந்த, 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித் அபிதாப்  நடித்த வேடத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

மூன்று பெண்களை மையமாக வைத்து நகரும் இந்த படத்தில் கதையில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம், மற்றும் பாலிவுட் நடிகை ஆண்ட்ரியா தரங் ஆகியோர் நடித்திருந்தனர்.

'No means No ' என்கிற மிகவும் சென்சிட்டிவான கருத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பத்திருந்தது. அதாவது, பெண்களுக்கு உறவில் விருப்பம் இல்லை என்றால், கட்டிய மனைவியோ அல்லது பாலியல் தொழில் செய்பவராக இருந்தாலும் தொட கூடாது என்பதை மிகவும் அழுத்தமாக கூறி இருந்தது இப்படம்.

இந்த கருத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கூடுதல் காட்சிகள் சேர்த்து எதார்த்தமாக இயக்கி இருந்தார் இயக்குனர் எச்.வினோத். மேலும் அஜித்தின் மனைவியாக பாலிவுட் நடிகை வித்தியா பாலன் நடித்திருந்தார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது 50ஆவது நாளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த விஷயத்தை அஜித், ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள். மேலும்  இயக்குனர் எச்.வினோத், மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். மீண்டும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் முன் ஏற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், விரைவில் இந்த படத்தின் பூஜை குறித்த தேர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.