தல அஜித்தை வைத்து, இயக்குனர் எச்.வினோத் முதல்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படம் பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.

பெண்களின் சுதந்திரம், உரிமை, மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் பற்றி பேசும் மிகவும் ஆழமான கருத்துடைய இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான அகலாதே பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை வரவேற்க இப்போதே தயாராகி விட்டனர் ரசிகர்கள். போட்டி போட்டுகொண்டு ரசிகர்கள் அனைவரும் 'நேர்கொண்ட பார்வை' பட டிக்கெட்டை முன் பதிவு செய்து கொண்டு வருகிறார்கள்.   

 மேலும் 'பிங்க்' படத்தை விட இந்த படத்தில் சில கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.  இந்த படத்தில் மூன்று முக்கிய நடிகைகள் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், மற்றும் ஆண்ட்ரியா தரங் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த படம் சென்னையில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்கங்கள் விவரம்:

சத்யம் திரயரங்கம், எஸ்கேப் திரையரங்கம், ஐநாக்ஸ் ராதாகிருஷ்ணன் சாலை, தேவி திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம், அண்ணா திரையரங்கம், ஆல்பட் திரையரங்கம், சங்கம் திரையரங்கம்,  ஈகா திரையரங்கம், பி. வி. ஆர் திரையரங்கம், ப்ளாஸோ திரையரங்கம்,  ஏ வி எம் ராஜேஸ்வரி திரையரங்கம், கமலா திரையரங்கம், உதயம் திரையரங்கம், ஐ ட்ரீம் திரையரங்கம், பாரத் திரையரங்கம், மகாராணி திரையரங்கம், எஸ் 2 திரையரங்கம், ஏ ஜி எஸ் திரையரங்கம், ராஜ் திரையரங்கம், கோபிகிருஷ்ணா திரையரங்கம், மஹாலக்ஷ்மி திரையரங்கம் ஆகிய இருபத்தி இரண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.