அஜித் நடிப்பில் 'பிங்க்' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே வெளியான, ஒரு பாடல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது வித்யா பாலன் மற்றும் அஜித் இணைந்து நடித்துள்ள ரொமான்ஸ் பாடலான 'அகலாதே'  பாடல் லிரிகள் வீடியோ இன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது போல் வெளியாகியுள்ளது. 

யுவன் சங்கர் ராஜா இசையில், மனதை மயக்கும் பாடல் வரிகளோடு இந்தப் பாடல் அமைந்துள்ளது. அஜித் மற்றும் வித்யா பாலன் காம்போவில் உருவாகியிருக்கும், அகலாதே பாடல் ரசிகர்கள் மனதை வருடும் விதத்தில் இருப்பதாக தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே அந்தப் பாடல் பல ரசிகர்களால் பார்க்கப்பட்டு, தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

அந்த பாடல் இதோ: