Nenjuku Needhi Teaser : ஆதி திராவிடர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்த சமூக நீதி படத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது..
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் ஆர்வம் காட்டி வந்தாலும், சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நெஞ்சுக்கு நீதி’. இப்படத்தை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இது இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தின் இயக்குனர் ஆவார். இப்படத்தில் உதயநிதி, இதுவரை நடித்திராத போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
உதயநிதிக்கு ஜோடியாக கருப்பன் பட நடிகை தன்யா நடித்துள்ளார். மேலும் மயில்சாமி, சரவணன், ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ், இசையில் உருவாகும் இந்த படத்திற்கு, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.. சமீபகாலமாக நடைபெற்று வரும் சமூக ரீதியான பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்குப்படுள்ள இந்த படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பீஜியம் மனதை வருடும் விதமாக இருந்து வருகிறது...போலீஸ் அதிகாரியாக உதயநிதி ... நீதிக்காக போராடும் காவலராக நடித்து அசத்தியுள்ளார்.. திமுக அரசு பதவியேற்ற கையேடு வெளியாகவுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்த படம் அரசியல் நுழைந்த கையோடு எம்.எல்.ஏ ஆகியுள்ள உதயநிதியின் இந்த துணிச்சல் படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது..

