nenjil thunivirunthal will release in Diwali - Director Sushindran confirmed ...

இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வரும் நெஞ்சில் துணிவிருந்தால் படம் வருகிற தீபாவளி அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாக தயாராக இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இந்தப் படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சுசீந்திரன் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் காமெடி நடிகர் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிந்து விட்ட நிலையில் அக்டோபர் மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடுமாம்.

இந்தப் படத்திற்கு அவரது பெற்றோர்கள் தான் தலைப்பு வைத்தனர் என்று சுவாரசியமான தகவலை பகிர்ந்தார் இயக்குனர் சுசீந்திரன்.

அந்தப் படத்தின் தலைப்பு என்ன என்பதை இப்போது சொல்லமுடியாது என்றும், ஆனால், விரைவில் தெரிவிப்பார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.