’அஜீத்தை எப்பிடியாவது சரிக்கட்டி ஒரு இந்திப்படத்தில் நடிக்கவைத்து விடுங்கள்’ என்று ‘நேர்கொண்ட பார்வை’ படத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு தனது ட்விட்டர் பதிவின் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார் பிரபல நடிகை நீது சந்திரா.

இந்தியின் முன்னணி நடிகையும் டேக் வாண்டோ கலையில் பிளாக்பெல்ட் பெற்றவருமான நடிகை நீது சந்திரா தமிழில் ’யாவரும் நலம்’,’யுத்தம் செய்’,’ஆதி பகவன்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் சரளமாகப் பேசக்கூடியவர்.

சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில்  “நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்தேன். நடிப்பில் அஜித் மிரட்டியிருக்கிறார். விரைவில் இந்திப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்காக 3 ஆக்‌ஷன் கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றையாவது தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

அந்த ட்விட்டர் பதிவுக்கு சுமார் 10 நாட்கள் கழித்து நேற்று பதிலளித்திருக்கும் நீது சந்திரா,...’நான்  சூப்பர் ஸ்டார் அஜீத் படத்தில் நடிக்கவேண்டும். எப்போதும் எனக்குப் பிடித்த ஆக்‌ஷன் நடிகர் அவர்தான் . அவரை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணுங்கள். அவர் இந்திப்படத்தில் நடிப்பதென்பது நமக்குக் கிடைக்கும் வரம்’என்று புல்லரிப்பின் உச்சிக்கே சென்றிருக்கிறார்.