இந்தி மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய காதலி ரியா சக்ரபார்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களான தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய 4 பேரிடமும் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். 

 

இதையும் படிங்க: விஜயதசமி பூஜையை அவமதித்த “இரண்டாம் குத்து” படக்குழு... படுமோசமாக சித்தரித்து போட்டோ வெளியீடு...!

தீபிகா படுகோனேவின் மேலாளரான கரிஷ்மா, சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் மேனேஜரான ஜெயா சாகாவுடன் குறுஞ்செய்தியில் உரையாடி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்தும் கடந்த மாதம் ஆஜரான கரிஷ்மா மற்றும் தீபிகா படுகோனேவிடம் போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.இந்நிலையில் நேற்று மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள கரிஷ்மாவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர் சித்ராவை அலேக்காக தூக்கிய வருங்கால கணவர்... விஜய் டி.வி. கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்போட்டோஸ்!

அப்போது 2 பாட்டில் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதைப்பொருட்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது கரிஷ்மா வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் கரிஷ்மாவை இன்று விசாரணைக்கு ஆஜராகும் படி வீட்டில் இருந்தவர்களிடம் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அவருடைய செல்போன்  எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என போதை தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.