நடிகை நஸ்ரியா, தற்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி, 'வலிமை' என ட்விட் செய்துள்ளதால், இந்த படத்தில் அவர் இணைந்துள்ளாரா என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மேலும் இந்த படத்திற்காக தான் தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளாரா என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மலையாள திரையுலகை சேர்ந்தவர் நடிகை நஸ்ரியா.  தமிழிலும் நேரம், ராஜா ராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவருடைய எதார்த்தமான நடிப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் திடீர் என, மலையாள முன்னணி நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்து அதிரவைத்தார்.

திருமணத்திற்கு பின் சில காலம், திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த இவர், தற்போது மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் 'கூடே', 'ட்ரேஸ்' மற்றும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய வித்தியாசமான சிகை அலங்கார புகைப்படத்தை வெளியிட்டு வலிமை என ஹாஷ் டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். எனவே நஸ்ரியா 'வலிமை' படத்தில் இணைத்துள்ளாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல், இந்த படத்திற்காக தான் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி உள்ளாரா என்பது போன்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.