அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான கூழாங்கல் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார். இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான கூழாங்கல் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, ‘டைகர்’ விருதை தட்டிச் சென்றது. இந்த விழாவிற்கான தேர்வின் போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பாரம்பரியமான வேஷ்டி புடவையில் சென்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த சந்தோஷத்தை தொடர்ந்து தற்போது டபுள் ட்ரீட் கொடுத்துள்ள அசத்தியுள்ளனர். 

Scroll to load tweet…

அதாவது ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கி நடந்து வரும் IFFSA டொரண்டோ விழாவுக்கு கூழாங்கல் படத்தை தேர்வு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம். தாங்கள் தயாரித்த கூழாங்கல் படத்திற்கு சர்வதேச அளவில் அடுத்தடுத்து அங்கீகாரம் கிடைத்து வருவதால் நயனும், விக்கியும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனராம். 

Scroll to load tweet…