தென்னிந்திய சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களும், ஜோடி போட்டு நடிக்க விரும்பும் நடிகையாக இருப்பவர்  நடிகை நயன்தாரா.  அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்தில் நடித்து முடித்துள்ள இவர், அடுத்ததாக இயக்குனர்  அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 63 ஆவது படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.  

மேலும் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ள 'இந்தியன் 2 ' படத்திலும் நடிக்க நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் ஒரு சில காரணங்களால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றியவர் சிற்றரசு இவர் இதுவரை நயன்தாரா பற்றி யாரும் வெளியிடாத ரகசியத்தை பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவதை கடந்த 2006ஆம் ஆண்டு முதல் அஜித் நடித்த அனைத்து படங்களிலும் ஸ்டில் போட்டோ கிராபர்ராக பணியாற்றியவர் சிற்றரசு  உதவி இயக்குநராக நயன்தாரா பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வமாக இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் படப்பிடிப்பிற்கு வரும் போது, சில ஆலோசனைகளை நயன்தாரா வழங்கியுள்ளார். அவரது தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருந்ததாம். அடுத்த ஒரு வாரம் எந்தவித படப்பிடிப்பும் அவருக்கு இல்லாததால்... விஷ்ணுவிடம் தான் உதவி இயக்குநராக இருக்கட்டுமா? என்று கேட்டுள்ளார். இதற்க்கு அவரும் ஓகே சொல்ல உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் நயன்தாரா. 

இதன் மூலம் நயன்தாராவிற்கு நடிப்பையும் தாண்டி இயக்கத்திலும் ஆர்வம் உள்ளது தெரியவந்துள்ளது... விரைவில் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா திரைப்படம் இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை!