சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள 2 . 0  படத்தை பார்க்க நடிகை நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை சத்தியம் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து கொண்டிருந்தவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் பல கோடி மதிப்பில் தயாரித்துள்ள 2 . 0  திரைப்படம்... உலகம் முழுவதும் நவம்பர் 29  ஆம் தேதி மிக பிரமாண்டமாக வெளியானது. 

இப்படத்தை ரசிகர்களையும் தாண்டி, பல பிரபலங்கள் பார்த்து விட்டு தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் 2 . 0  படத்தை நடிகை நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை சத்தியம் திரையரங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் வெளியாக வைரலாக பரவி வருகிறது. 

சூப்பர் ஸ்டாருக்காகா, லேடி சூப்பர் ஸ்டார் ரிஸ்க் எடுத்து... பிரபல திரையரங்கம் வந்து 2 . 0 திரைப்படத்தை பார்த்துள்ளது அங்கிருந்த ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் நயன்தாரா ரசிகர்கள் பலர் அவருடன் இணைத்து புகைப்படமும் எடுத்து கொண்டுள்ளனர். நயன்தாரா வந்துள்ளார் என்கிற தகவல் வெளியானால் கூட்டம் கூடி விடும் என விக்னேஷ் சிவன் அனைவரையும் கேட்டு கொண்டதால் இந்த தகவலை அங்கிருந்த ரசிகர்கள் யாரும் வெளியிடாமல் இருந்தார்களாம்.