Nayanthara and Vignesh shivan Controversy: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் சென்ற தனியார் புகைப்பட நிறுவனத்தின் ஆட்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்குள் செருப்புடன் சென்றதாக சர்சை கிளம்பியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்:

கடந்த 7 வருடங்களாக காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி 20 புரோகிதர்கள் மந்திரம் ஓத நேற்று காலை10.25 மணியளவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது, திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர ஓட்டலில் நேற்று பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது.

கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்:

இந்த திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், விஜய், விஜய்சேதுபதி என ஏராளமான நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம்ம வைரலானது. அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தொடர்ந்து, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருப்பதி தரிசனம்:

இதையடுத்து, விக்னேஷ் நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருமலை திருப்பதி ஆலயத்திற்கு திருமணம் முடிந்த கையோடு சுவாமி தரிசனத்திற்கு சென்றார். அங்கு இருவரும் திருப்பதியில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டது. 

இதையடுத்து, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருப்பதி யில் சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மஞ்சள் நிற புடவையில் நயன்தாரா தேவதை போல் ஜொலித்துள்ளார். 

நயன்தாரா விக்னேஷ் சிவன் சிக்கிய சர்சை:

 அப்போது, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் சென்ற தனியார் புகைப்பட நிறுவனத்தின் ஆட்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்குள் செருப்புடன் சென்றதாக சர்சை கிளம்பியது. இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம், புகைப்பட நிறுவனத்தின் ஆட்கள் நின்றிருந்த பகுதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு வெளியில் இருக்கும் பகுதி தான் எனவும், அந்த பகுதியில் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்ல எந்த தடையும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க...Nayanthara Vignesh Shivan wedding: டிரெடிஷனல் ஆனால், தனித்தன்மை நயன்- விக்கி திருமணம் உடையின் சிறப்பம்சங்கள்..