MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayanthara Vignesh Shivan wedding: டிரெடிஷனல் ஆனால், தனித்தன்மை நயன்- விக்கி திருமணம் உடையின் சிறப்பம்சங்கள்..

Nayanthara Vignesh Shivan wedding: டிரெடிஷனல் ஆனால், தனித்தன்மை நயன்- விக்கி திருமணம் உடையின் சிறப்பம்சங்கள்..

Nayanthara Vignesh Shivan wedding: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நேற்று பாரம்பரிய முறையில், சென்னை மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. 

2 Min read
Anija Kannan | Asianet News
Published : Jun 10 2022, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
nayanthara vignesh shivan wedding

nayanthara vignesh shivan wedding

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தின் மூலம், காதல் ஜோடிகளான இணைந்தவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர். கடந்த 6 வருடங்களாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்த  இவர்கள் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.  

26
nayanthara vignesh shivan wedding

nayanthara vignesh shivan wedding

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நேற்று பாரம்பரிய முறையில், சென்னை மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், மணிரத்னம், ஷாருக்கான் அஜித், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, அனிருத் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

36
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர்களுக்கு பல்வேறு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இன்னும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா.

46
Nayanthara Vignesh shivan wedding

Nayanthara Vignesh shivan wedding

இந்த நிலையில், திருமணத்தின் போது மணமக்களான நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் அணிந்திருந்த உடைகள் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் பாரம்பரியம் மற்றும் குடும்ப மரபுகளை கவுரவிக்கும் விதமாக  உடை அணித்திருந்தனர். கத்ரினா கைப் -விக்கி கவுசல் திருமணத்தில் மணமக்களுக்கு ஆடை அணிகலன்கள் அலங்காரன் செய்த மும்பையில் உள்ள காஸ்ட்யூம் டிசைனர் குழுதான் நயனுக்கும், விக்கிக்கும் உடை உள்ளிட்ட அலங்காரங்களை செய்துள்ளனர்.  

56
Nayanthara Vignesh shivan wedding

Nayanthara Vignesh shivan wedding

திருமண விழாவிற்கு, ஜேட் மோனிகா ஷாவால் வடிவமைக்கப்பட்ட வெர்மில்லியன் என்ற சிவப்பு நிற ஆடையை நயன்தாரா அணிந்திருந்தார். லெஹெங்காவுக்கு மேல் புடவையில் இருக்க நயன்தாரா விருப்பம் தெரிவித்ததால், தோற்றத்தை அதிகரிக்க வடிவமைப்பாளர் ஆடையின் நீளத்தை முக்காடாக வடிவமைத்துள்ளார். 

66
Nayanthara Vignesh shivan wedding

Nayanthara Vignesh shivan wedding

அதுமட்டுமல்லாமல், 4வது சபதத்தைக் குறிக்கும் வகையில், ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றைக் குறிக்கும் பல வடிவங்கள் இந்த ஆடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று,  மணமகனான விக்னேஷ் சிவன் திருமண உடையில் பாரம்பரியத் தன்மையும் உள்ளது. இது நான்கு ஃபெராக்களுடன் எதிரொலிப்பதால், ஒரு வேஷ்டி, குர்தா மற்றும் சால்வையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவை அனைத்தும் ஜேட் அட்லியரின் தலைசிறந்த கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்டவையாகும்.  

 மேலும் படிக்க....Vignesh: திருமணம் முடிந்த கையோடு விக்கி -நயன் சென்ற முதல் இடம்...அப்ப ஹனிமூன் என்னாச்சு..? வருத்தத்தில் விக்கி

About the Author

AK
Anija Kannan
நயன்தாரா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved