கோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா -  விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து... அதை இன்ஸ்டாவில் போட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றுகின்றனர். 

நயன் எங்கு போனாலும் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார். பதிலுக்கு விக்கியும் நயனை அதிகாரம் செய்யாமல் தங்கமே, வைரமே என்று கொஞ்சுகிறார். சமீபத்தில் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரி சென்ற இந்த காதல் ஜோடி, கோவில் கோவிலாக விசிட் அடித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

இதையும் படிங்க: சாய்பல்லவி கொடுத்த முத்தத்தால்... திக்குமுக்காடி போன சமந்தா புருஷன்... வைரலாகும் செம்ம ரொமாண்டிக் பாடல்...!

கடந்த சில வருடங்களாக இந்த நயன் - விக்கி ரொமாண்டிக் ஜோடி லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா இந்த வருடமாவது கல்யாணம் செய்து கொள்வாரா...? என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். 

இதனிடையே நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. எப்பவுமே இந்த மாதிரி முக்கிய நாட்களில் தங்கமே, செல்லமே என்று நயனை கொஞ்சி, ஏதாவது கவிதை போடுவார். அதற்காக ஆவலாக காத்திருந்த ரசிகர்கள், எங்கப்பா நயன் - விக்கி லவ்வர்ஸ் டே ஸ்பெஷலைக் காணோம் என சோசியல் மீடியாவில் தேட ஆரம்பித்தனர். 

இதையும் படிங்க: பார்ட்டியில் ஓவர் ஆட்டம்... உச்சகட்ட போதையில் பேண்ட் போட மறந்த அமலா பால்....!

இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக விக்கி, நாங்கள் காதலிக்க ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகிறது. காத்துவாக்குல 5 வருஷம் எப்படி ஆனதுன்னு தெரியல. உன்னுடைய காதல் மற்றும் அன்பினால் நாள்தோறும் நமக்கு காதலர் தினம் தான் என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் ரெண்டு லட்டு... நயன் லவ்வர் மூலம் விஜய்சேதுபதிக்கு கிடைத்த சூப்பர் லக்கு...!

நயன் - விக்கி ரொமாண்டிக் போஸ் உடன் வெளியாகியுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகின்றன. ஆனால் அதை பார்க்கும் நயன் ரசிகர்கள் தான் எல்லா நாளும் லவ்வர்ஸ் டேவா...? வெட்டிங் டேங்கிற ஐடியாவே உங்களுக்கு இல்லையா...? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.