ஒரு காலத்தில் கமலுடன் நடிக்க நடிகைகள் போட்டி போட்ட காலம் போய் தற்போது கமலுடன் நடிக்க நடிகைகள் கன்டிசன் போடும் நிலை ஏற்பட்டுள்ளது.    இந்தியன் படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்பை இயக்குனர் ஷங்கர் தொடங்கி மாதக்கணக்கில் ஆகிறது. ஆனால் தற்போது வரை படப்பிடிப்பில் நடிகர் கமல் கலந்து கொள்ளவில்லை. கமல் போர்சன் தவிர்த்த மற்ற காட்சிகளை ஷங்கர் தற்போது இயக்கி வருகிறார். மேலும் இந்தியன் 2 படத்தின் கிராபிக்ஸ் பணிகளிலும் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில் விரைவில் கமல் இந்தியன் 2 சூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். இதனால் படத்தில் கமலுக்கு ஜோடியை இயக்குனர் ஷங்கர் முடிவு செய்துள்ளார். ஆமாம், இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைப்பது என்று முடிவாகியுள்ளது. கமலும் நயன்தாராவுக்கு ஓ.கே சொல்லிவிட்டார். தயாரிப்பாளரும் கூட நயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராகிவிட்டார்.இதனை தொடர்ந்து நயன்தாராவை இயக்குனர் ஷங்கர் தரப்பு அணுகியுள்ளது. அப்போது இந்தியன் 2-ல் நடிக்க தயார் என்றும், ஆனால் சில கண்டிசன்கள் இருப்பதாக நயன்தாரா கூறியுள்ளார். அதாவது படத்திற்கு எத்தனை நாட்கள் கால்ஷீட்டோ அத்தனை நாட்கள் மட்டுமே நடிக்க வருவேன், நடிப்பதாக ஒப்புக் கொண்ட நாட்களில் மட்டுமே நடிக்க வருவேன் என்று நயன்தாரா கூறியுள்ளார்.

மேலும் ஒப்புக் கொண்டதை விட கூடுதல் நாட்களில் நடிக்க வேண்டும் என்று கட்டாயம் ஏற்பட்டால் தனக்கு அந்த நாட்களில் வேறு ஏதும் வேலை இல்லை என்றால் மட்டுமே நடிப்பேன் என்று தனது கண்டிசன்களை நயன்தாரா பட்டியலிட்டுள்ளார். மேலும் படத்தில் டூ பீஸ் காட்சிகளில் நடிக்க மாட்டேன், நீச்சல் உடை அணியமாட்டேன் என்றும் தன் கண்டிசன்களை நயன்தாரா மேலும் நீட்டித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் முத்தக்காட்சி இருக்கிறது என்றால், முதலிலேயே கூறிவிட வேண்டும் என்றும் நயன்தாரா தெரிவித்துள்ளார். இதனால் இயக்குனர் ஷங்கர் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் நயன்தாராவின் கண்டிசன்களை ஏற்று இந்தியன் 2ல் நடிக்க வைப்பது என்று ஷங்கர் உறுதியுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது கண்டிசன்களுக்கு ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் தயாரிப்பாளர் தரப்பு கையெழுத்திட வேண்டும் என்றும் நயன்தாரா தரப்பு இந்தியன் 2 படக்குழு தரப்பிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.