தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி தனது காதலர் விக்னேஷ் சிவனின் அம்மாவையும் அவரது சகோதரிகளையும் நயன்தாரா சந்தித்திருப்பதை ஒட்டி விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகத் தெரிகிறது.

தமிழ் புத்தாண்டுக்காக  விக்னேஷ் சிவன் நயன்தாராவை தன் வீட்டுக்கு அழைத்து சென்று தன் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.நயன்தாராவும் அவர் மாமியாரும் குடும்பத்துடன் ஒன்றாக உள்ள புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. இந்த முதல் சந்திப்பின் பின்னணியில் அவர்களது திருமணச் செய்தியும் மிக விரைவில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

சுமார் மூன்று ஆண்டுகளாக காதலர்களாகவே பழகி வரும் நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்து வந்தாலும் சமீப காலமாக அவர்களது காதல் சில சோதனைகளைச் சந்தித்து வருகிறது. ராதாரவி விவகாரத்தில் விக்னேஷ் சிவன் கொதித்தபோது, திருமணம் செய்துகொள்ளாமலே எவ்வளவு காலத்துக்குக் கூத்தடிப்பீங்க என்று  சில விமர்சனங்கள் வந்தன.

அடுத்து விக்னேஷ் சிவனை மிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது ரஜினி படம். மும்பையில் நடந்த இப் படப்பிடிப்புக்கு கொல்லைவழியாக விக்னேஷ் சிவன் டிக்கட் போட்டது பரபரப்பான செய்திகளாக்கப்பட்டது இருவரையுமே தர்மசங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இனியும் திருமணத்தைத் தள்ளிப்போட வேண்டாம் என்ற முடிவை இருவரும் இணைந்தே எடுத்திருப்பதாகவும், ரஜினி, விஜயுடன் நடிக்கும் இரு படங்களுமே வரும் அக்டோபருக்குள் முடியும் என்பதால் டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் நடைபெறலாம் என்று நம்பப்படுகிறது.