மலையாளத்தில் நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக ஏங்கித் தவித்துக் காத்திருந்து ஒரு வழியாகப் படத்தை முடித்த ‘லவ் டிராமா ஆக்‌ஷன்’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக 'லவ் ஆக்சன் டிராமா' படத்தில்  நடித்துள்ளார். இப்படத்தை தியான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் வில்லனாக சின்னத்துரை பிரபலம் பிரஜன் நடித்துள்ளார். 

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே முடிந்திருக்கவேண்டிய இப்படம் நயன்தாராவின் கால்ஷீட் இல்லாமல் காத்துக்கிடந்தது. திழி, தெலுங்கில் வாங்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு மடங்கு கூட நயனுக்குத் தராததால் படக்குழுவினர் நயன் மீது புகார் எதுவும் சொல்லாமல் பொறுமையாகக்காத்திருந்தனர்.இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஓணம் பண்டிகையின் போது திரைக்கு வரவுள்ளது.தனது தாய்மொழியில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் நடித்துள்ள படம் என்பதால் பட ரிலீஸ் குறித்து மிக ஆர்வமாக உள்ளார் நயன்தாரா.