'விஸ்வாசம்' படத்தில் அஜித்துடன் நடிக்கும் கெட்டப்போடு நயன்தாரா ஒரு புகைப்படத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அஜித் ஏற்கனவே இரட்டை வேடத்தில் நடித்த பில்லா படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது மீண்டும் அஜித் டபுள் ஆக்‌ஷன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்த படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் வரும் இரண்டு அஜித்களில் அப்பா அஜித்துக்கு ஜோடியாக 'காலா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஈஸ்வரி ராவ்வும் மற்றும் இளைய அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும்  நடித்து வருகின்றனர்.

பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தின், மோஷன் போஸ்டர்   சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்த மோஷன் போஸ்டர் வீடியோ இதுவரை வெளியான எல்லா மோஷன் போஸ்டர்களின் சாதனைகளையும் முறியடித்தது.

இந்நிலையில், இந்த படத்தில் இளம் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த போட்டோவில், பட்டுப்புடவை, கழுத்து நிறைய நகை, நெற்றியில் குங்குமம் என அசல் கிராமத்து பெண்ணாக மாறி இருக்கிறார். மேலும் இவர் இந்த புகைப்படத்தை வெளியிட்ட சில நிமிடங்களில் பல்லாயிரம் லைக்குகளை வாரி குவித்துள்ளது.