Nayanthara on board as the heroine for Viswasam

அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து தற்போது 4ஆவது முறையாகச் சிவாவுடன் அஜித் விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளார். வரும் 22ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கான தேர்வு விறுவிறுப்பாக நடந்துவந்தது.

இப்படத்தில், அஜித் வடசென்னை தாதாவாக வருகிறாராம். அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், ஆத்மிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிப்பார் என்று செய்திகள் வந்த நிலையில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

இது குறித்த தகவலை விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பில்ம்ஸ் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே தனக்குப் பிடித்த நடிகர் அஜித் என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்.

ஏற்கனவே, நயன்தாரா அஜித்துடன் இணைந்து பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய மூன்று படங்களில் நடிதுள்ள நிலையில், தற்போது விஸ்வாசம் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நான்காவது படமாகும்.

Scroll to load tweet…