Asianet News TamilAsianet News Tamil

கொரியன் படத்தை ஈயடிச்சான் காப்பி அடிக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா...ஒரிஜினல் படத்தைப் பாருங்க...

நேற்று முன் தினம் தடபுடலாக பூஜை போடப்பட்ட நயன்தாராவின் 65 வது படமான ‘நெற்றிக்கண்’ 2011ம் ஆண்டு வெளிவந்த ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்பது அம்பலமாகியுள்ளது. இதற்கான உரிமை முறைப்படி பெறப்பட்டுள்ளதா அல்லது வழக்கம்போல் திருடப்படுகிறதா என்கிற விபரம் தெரியவில்லை. இக்கதையை இயக்குநருக்கு சிபாரிசு செய்தததே நயன்தானாம்.

nayanthara new movie netrikkann copied from korean movie blind
Author
Chennai, First Published Sep 17, 2019, 12:05 PM IST

நேற்று முன் தினம் தடபுடலாக பூஜை போடப்பட்ட நயன்தாராவின் 65 வது படமான ‘நெற்றிக்கண்’ 2011ம் ஆண்டு வெளிவந்த ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்பது அம்பலமாகியுள்ளது. இதற்கான உரிமை முறைப்படி பெறப்பட்டுள்ளதா அல்லது வழக்கம்போல் திருடப்படுகிறதா என்கிற விபரம் தெரியவில்லை. இக்கதையை இயக்குநருக்கு சிபாரிசு செய்தததே நயன்தானாம்.nayanthara new movie netrikkann copied from korean movie blind

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன் தாரா நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு பூஜைபோடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இப்படத்தலைப்பான நெற்றிக்கண்ணுக்கு முறைப்படி நயனும் விக்னேஷ் சிவனும் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியிடம் நேரில் சென்று உரிமை பெற்றிருந்தனர். டைட்டில்காரர்கள் உள்ளூரில் இருப்பதால் முறைப்படி உரிமைபெற்ற நயன் கோஷ்டியினர் கதை விவகாரத்தில் ஒரு திருட்டுத்தனம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

படக்குழுவினர் பூஜையன்று வெளியிட்டிருந்த கதைச் சுருக்கத்தில் ‘நெற்றிக்கண்’ஒரு த்ரில்லர் படமென்றும், அப்படத்தில் நயனுடன் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அந்த நாயை வைத்து துப்புத் துலக்க ஆரம்பித்த நெட்டிசன்கள் தற்போது அக்கதை 2011ல் வெளிவந்த ’ப்ளைண்ட்’என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.nayanthara new movie netrikkann copied from korean movie blind

'பிளைண்டு' படத்தின் கதை என்ன என்றால், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். காவல்துறை இந்த வழக்குகளுக்கு சாட்சி இருக்கிறதா என்று தேடுகிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சூ-ஹா என்பவர் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் அவர் ஒரு விபத்தில் தன் கண்பார்வையை இழந்தவர். ஒரு கார் விபத்து வழக்கு பற்றிய முக்கியமான ஆதாரத்தை அவர் தருகிறார். சூ ஹா வின் மற்ற புலன்கள் அவருக்குக் கை கொடுக்கின்றன. திடீரென இன்னொரு சாட்சி, கி-சியாப் காவல்நிலையத்துக்கு வருகிறார். இவர் சம்பவத்தை நேரில் பார்த்தவர். இவர் சொல்வதும், சூ ஹா சொல்வது முற்றிலும் வெவ்வேறு விதமான சாட்சியாக இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது என்பதே கதை.

தற்போது இந்தக் கதையிலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா என்று இரண்டு சாட்சிகள். நடந்திருப்பது ஒரு கதைத் திருட்டு. உண்மை எப்படி வெளிவருகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios