தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற மிகப்பெரிய அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. 

தற்போதெல்லாம் நயன்தாரா நடித்தாலே அந்த திரைப்படம் ஹிட் என்கிற நினைத்து கொள்கிறார்கள் ரசிகர்கள். நயன்தாராவும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் தான் நடிக்க தேர்வு செய்யும் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார். 

இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான நடிப்பில் 'அறம்'  'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நயன்தாராவின் 63வது படத்தை இயக்குனர் சர்ஜுன் இயக்கி வருகிறார். இவர் லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நயன்தாரா, பேய்களை ஆராய்ச்சி செய்யும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை அதாவாது  மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் நயன்தாரா.... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.