’கண்டிப்பாக இந்தவாட்டி கல்யாணத்தில் முடியும்’ என்று சினிமா துறை வல்லுநர்களால் வண்ணமாக எதிர்பார்க்கப்படுகிறது நயன்தாராவின் விக்னேஷ் சிவன் மீதான காதல். அஜித், விஜய், ரஜினி என மெகா மாஸ் ஸ்டார்களுடனான தனது படங்களை விறுவிறுவென நயன் முடித்துக் கொடுத்ததும் இதற்காகத்தான்! என்றார்கள். 


இந்த நிலையில் இப்போது இதில் ஒரு சின்ன பிரேக். நயன் தாரா மீண்டும் அஜித், சூர்யா என்று ஒரு ரவுண்டை எதிர்பார்க்கிறார். அதேபோல் விக்னேஸ் சிவனின் மனமும் மாறிவிட்டது. 


இப்போது அவரது கண்கள் முழுக்க முழுக்க ஃபோகஸ் செய்ய துவங்கியிருப்பது அஞ்சலியைத்தான். அஞ்சலிக்கு காதல் கற்றுத் தருவது, சிணுங்கல் கற்றுத் தருவது என செம்ம பிஸியாகிவிட்டார் விக்கி. 


என்னது விக்னேஸ் நயனை விட்டுட்டு அஞ்சலியை பிக் அப் பண்ணிட்டாரா? என்று எகிறாதீர்கள். விக்கி அடுத்து ஒரு ஃபுல் லென்த் படத்தை இயக்குவதற்கு முன்பாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். இதன் ஹீரோயின் அஞ்சலிதான். அதனால்தான் விக்கி, அஞ்சலியை ஃபோகஸ் செய்து கொண்டிருக்கிறார். அஞ்சலியும் இப்போ செம்ம பிஸிதான். நாடோடிகள் 2 விரைவில் ரிலீஸ், அதற்கு அடுத்து அனுஷ்கா ப்ரைம் ரோலில் பண்ணும் ‘சைலன்ஸ்’ படத்தில் அஞ்சலி இருக்கிறார், அருள்நிதியுடன் ‘ஓ’ போய்க் கொண்டிருக்கிறது. 

விக்னேஷ் சிவன் செம்ம யூத் ஃபுல் இயக்குநர், தமிழ் சினிமா ரசிகர்களின் டார்லிங்ஸில் அஞ்சலியும் ஒருவர். எனவே இந்த காம்போ இணையும் வெப் சீரீஸ் நிச்சயம் ஹிட்டடிக்கும்! என்கிறார்கள். 
கலக்கு ஆஞ்ச்லி!