*    நீண்ட நாட்களுக்குப் பிறகு போலீஸ் யூனிஃபார்மில் ரஜினி நடித்திருப்பதால், தர்பார் படத்தில் ஆக்‌ஷன் பிளாக்குகளையும், பஞ்ச் டயலாக்குகளையும் வெறித்தனமாக எதிர்பார்த்தனர் ரஜினி ரசிகர்கள். அந்த எதிர்பார்ப்பு ஒரளவு நிறைவேறியுள்ளது. ‘ஒரிஜினலாவே நான் வில்லன் மா!  போலீஸ்கிட்ட லெஃப்ட்ல வெச்சுக்கோ, ரைட்ல வெச்சுக்கோ ஆனா ஸ்ட்ரெய்ட்டா வெச்சுக்காதே! ஐ ஆம் எ பே காப்!’ என்று மூன்று நறுக் டயலாக்குகள் மட்டுமே டிரெய்லரில் தெறித்துள்ளன. 
படம் என்ன சொல்லப்போகுதோ! என கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். 

*    தர்பார் படத்தின் ஹீரோயின் நயன் தாரா. இப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்புக்காக சில நாட்களாக கன்னியாகுமரியில் தங்கியிருக்கும் அவர், சுசீந்திரம் கோயிலுக்கு போய்விட்டு திரும்புகையில் காரில் வைத்து பார்த்திருக்கிறார். 
தர்பார் படத்தை தயாரித்திருக்கும் லைகா மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் நயனுக்கு சில பிரச்னைகள் படப்பிடிப்பின் போது. இதனால் தன்னை டிரெய்லரில் இருட்டடிப்பு செய்துவிட்டார்களோ என்று நினைத்தவர், அப்படி இல்லை என்றதும் கூல். 

*    எனக்கு வயசாகிடுச்சு. அதனால டூயட் பாடி நடிக்க விருப்பமில்லை! என்றார் தர்பார் பாட வெளியீட்டு விழாவில் ரஜினி. ஆனால் டீசர் சொல்லும் சேதிபடி பார்த்தால் அவர் இளமையான போலீஸ் அதிகாரியாகவே அப்படத்தில் நடித்துள்ளார் என்பது புலனாகிறது. ‘சந்திரமுகி’ படத்தில் அண்ணனோட பாட்டு! போல் இதிலும் நயனோடு ஒரு பார்ட்டி டான்ஸ் இருக்கிறது ரஜினிக்கு. 

*    தர்பார் படத்தில் ரஜினிக்கு  இளம் மகள் இருப்பது போல் கதை! என்றார்கள். இதனால் 70 வயது ரஜினியின் ரசிகர்களுக்கு  மனம் சுருங்கிவிட்டது. ஆனால், டீசரில் அப்படி எந்த காட்சியும் இல்லை. இதனால் ரசிகர்களுக்கு பெரிய நிம்மதி. 
-    விஷ்ணுப்ரியா