'ஐயா' படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகம் கொடுத்த நயன்தாரா, தற்போது 12 வருடங்களை கடந்தும் முன்னணி நடிகையாக இருக்கிறார். 

கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகர் மேல் இருந்த காதல் காரணமாக, திரைப்படங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு அவரை திருமணம் செய்துகொள்ள இருந்த இவர் திடீர் என  இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தங்களது காதலை முறித்துக்கொண்டு மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினர்.

இதனை தொடர்ந்து நயன்தாரா நடித்த 'ராஜா ராணி' 'நானும் ரௌடிதான்' , 'தனி ஒருவன்' , 'மாயா' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்களை தேர்தெடுத்து நடித்து வருவதோடு... ஏற்கனவே 2 கோடியில் இருந்து நான்கு கோடியாக உயர்த்திய சம்பளத்தை. தற்போது 6 கோடியாக உயர்த்தியுள்ளாராம் நயன்தாரா.

மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் 'உய்யலவாடா நரசிம்ம ரெட்டி' என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா 6 கோடி சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தை தயாரித்து உள்ள சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அதிகார பூர்வ தகவல் வெளிவரும் எனவும் எதிரிபார்க்கப்படுகிறது. 150 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.