பிரபு தேவா நடிகர் அஜித்தை வைத்து இயக்க உள்ள படத்தில்,அஜித்துக்கு  ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது சிவா இயக்கத்தில், விசுவாசம் படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தை முடித்த உடன், வேறு பல கதைகள் அஜித்காக காத்திருக்கிறதாம்.

இந்நிலையில், டைரக்டர் வினோத் படத்தில் நடிகர் அஜித் நடிக்கலாம்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஒரு திருப்பமாக பிரபு தேவா படத்தில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

பிரபு தேவா சமீபத்தில் ஒரு கதையை நடிகர் அஜித்திடம் சொல்ல, அவருக்கு மிகவும் பிடித்து விட, தற்போது ஓகே சொன்னாராம் அஜித்.

இந்நிலையில் அஜித் உடன் நயன்தாரா நடிக்க தயாராக இருந்தாலும்,  இந்த படத்தை பிரபு தேவா இயக்குவதால், நயன்தாரா மறுப்பு  தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு  கிளம்பியது.

முன்பு ஒரு காலத்தில்,நயன்தாரா மற்றும் பிரபு தேவா மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர்.பின்னர் பிரிந்தனர்.

இதே போன்று,சிம்பு உடனும் காதல் வயப்பட்டார் நயன்தாரா என பல செய்திகள் வெளியானது.பின்னர் அவர்களும் பிரிந்தனர். இருந்தபோதிலும் "இது நம்மன் ஆளு பட்சத்தில் சிம்புடன் இணைந்து நடித்தார் நயன்தாரா.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது நயன்தாரா," தனிப்பட்ட  வாழ்கை வேறு, தொழில் வேறு என்று நச்சின்னு பதில் அளித்துள்ளார்.

தற்போது நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.