- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!
கடைசியில் தங்கமயில் படித்த அறிவாளி மற்றும் புத்திச்சாலி பெண்ணான மீனாவிடம் தனது 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றியுள்ளார். அது என்ன என்று பார்க்கலாம்.

Pandian Stores Serial Today Episode Highlights
பாண்டியன் வீட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தங்கமயிலை பல சண்டை சச்சரவுகளுக்கு பிறகு பாக்கியம் தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார். மேலும், நீ எதுக்கு அந்த வீட்டிற்கு போன, எதுக்கு வீட்டு வாசலில் போய் உட்கார வேண்டும் என்றெல்லாம் தங்கமயிலின் தங்கையும், அவரது அம்மாவும் கேட்டனர். நீ அந்த வீட்டுக்கு சென்று போராட்டம் நடத்த வேண்டும் என்று உனக்கு என்ன தலையெழுத்தா? மனுச ஜென்மங்களா அவங்களா? ஏதோ ஒன்னு ரெண்டு பொய் சொல்லிவிட்டோம். என்ன இருந்தாலும் மயில் அந்த வீட்டோட மூத்த மருமகள்.
Pandian Stores 2 Serial
விவாகரத்து எல்லாம் அவர்களாக எடுக்க முடியாது. இரண்டு குடும்பமும் சேர்ந்து தான் எடுக்க முடியும். போற போக்குல உன்னுடம் வாழ முடியாது என்று சொன்னால் அப்படியெல்லாம் விட முடியாது. முழுசா 2 வருடம் கூட வாழவில்லை. அப்போது குறுக்கிட்ட சுடர், நீங்கள் சொன்ன பொய்யால தான் அக்காவின் வாழ்க்கை இப்படியாகிவிட்டது. ஆமாம், நாங்கள் பொய் சொன்னோம். ஊர் உலகத்திலேயே இல்லாத கடையாக்கும். லட்சம் லட்சமாக வருமானம் வருது என்று சொன்னாங்க. அவர்களும் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றார்.
Saravanan Divorce Notice
இன்னும் நகை மேட்டர் வெளியில் வரவில்லை. அதுவும் வெளியில் வந்தால் அவ்வளவு தான் என்று சுடர் சொல்ல மயில் கதறி அழுதார். பயமாக இருக்கு. ஏதோ, எனக்கு என்று ஒரு வாழ்க்கை, குடும்பம் வந்தது என்று சந்தோஷமாக இருந்தேன். அது கடவுளுக்கே பொறுக்கவில்லை. எங்க ஆரம்பித்தேனோ அங்கேயே என்னை அனுப்பி வைத்துவிட்டார். எனக்கு டைவர்ஸ் மட்டும் கிடைத்துவிட்டால் நான் இந்த வீட்டிலேயே இருக்கமாட்டேன். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கதறி அழுதார்.
Saravanan and Thangamayil
இறுதியாக மீனாவிற்கு தங்கமயில் போன் போட்டார். திரும்ப திரும்ப கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். வேறு வழியில்லாமல் அவரது போனை எடுத்து பேசினார். எதுக்கு போன் பண்ணீங்க அத சொல்லுங்க என்று மீனா கேட்க, எனக்கு ரொம்ப பயமாக இருக்கு. உங்க மாமா விவாகரத்து கேட்கிறார். எனக்கு விவாகரத்து எல்லாம் வேண்டாம். நாம் எல்லோரும் ஒன்றாகத்தான் அந்த வீட்டில் இருக்கிறோம். மாமா விவாகரத்து வேண்டும் என்று கேட்கும் போது நீங்கள் யாரும் ஒரு வார்த்தை கூட தப்பு என்று சொல்லவில்லை.
Thangamayil Drama
அப்போது எல்லோருக்கும் இதில் சம்மதம் தானா? நீங்கள் எல்லோரும் நானும் மாமாவும் விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று அடிக்கிக்கொண்டே போக, உங்களது கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நான் இல்லை. நீ என்னை அக்கா அக்கா என்று கூப்பிடும் போது என் மீது உள்ள பாசத்தில் தான் கூப்பிடுவதாக நினைத்தேன். உன் கூட பிறந்த அக்காவா இருந்தால் நீ இப்படித்தான் இருப்பீயா என்று கேட்டார். இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.