விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டாததால் விலை போகவில்லை என்று சொல்லப்பட்ட நயன்தாராவின் 12கோடி ரூபாய் பட்ஜெட் ’கொலையுதிர்காலம்’ படத்துக்கு வெறும் பத்தாயிரம் செலவழித்தவர் முட்டுக்கட்டை போடுவதா என்று புலம்பி வருகிறாராம் தயாரிப்பாளர்.

கொலையுதிர்காலம் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவியால் மட்டம் தட்டப்பட்டதைக் குறிப்பிட்டு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொலையுதிர் காலம் படம் குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இந்தப் படத்தை ஒன்றை இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே உளறிக்கொட்டினர் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

 பழைய அந்த பதிவால் தற்போது கொலையுதிர் காலம் படக்குழுவிற்கு மிகப்பெரிய தலைவலி வந்துள்ளது. அது என்னவெனில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் கைவிடப்பட்ட படம் என்று குறிப்பிட்டதால், இந்த படத்தை ட்ரைலர் வெளியீட்டிற்கு முன்னதாக வாங்கி கொள்கிறேன் என்று கூறிய பலரும் தற்போது கைவிடபட்ட படத்தை எப்படி வாங்குவது என்று யோசித்து வருகின்றனர்.
கடைசிநேரத்தில் பாலாஜி குமார் என்பவர், கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்த நீதிபதி, இவ்விவகாரத்தில் ஜூன் 21ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்தத் தடை குறித்து கொந்தளித்த  இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியதாவது , தயாரிப்பாளர் ரிலீஸ் பரபரப்பில் தவிக்கும்போது பணம் கேட்டால் கொடுத்துவிடுவார் என்று திட்டமிட்டுச் செய்கின்றனர். எனக்கு மட்டுமல்ல நிறையத் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற அநியாயச் செயலை அனுபவித்துவருகின்றனர். இதுவரை 12 -கோடி ரூபாய் செலவு செய்து ரிலீஸாக ரிஸ்க் எடுத்த கொண்டிருக்கும்போது, வெறும் 10,000 ரூபாய் செலவுசெய்து தடை வாங்குவதா? தயாரிப்பாளர் பயந்துகொண்டு சில லட்சங்கள் கேட்டால் கொடுத்துவிடுவார் என்று தவறாகத் திட்டமிட்டு, ஒரு கூட்டம் செயல்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.