தமிழ் சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னை நடிகை என்றால் அது கண்டிப்பாக நயன்தாராதான். படங்களில் நடித்து வந்தாலும், கண்ணனுக்கு தெரியாமல் சில விழிப்புணர்வுகளிலும் இவர் பங்கு வகிக்கிறார்.

இவர் தற்போது டோரா, இமைக்கா நொடிகள்,மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படம் என வரிசைக்கட்டி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் இராமநாதபுரத்தில் உள்ள கீழக்கரை பங்களாவில் 2 வாரம் தங்கியுள்ளார், என்ன என்று விசாரிக்கையில் படப்பிடிப்பிற்காக அங்கு வந்துள்ளார்.

இவர் தற்போது குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்து வருகிறார், அதற்காக படக்குழு இராமநாதபுரத்தில் முகாமிட்டுள்ளது தெரியவந்தது.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்தாலும் அடுத்த தலைமுறையினரின் வாழ்விற்காக தற்போது தண்ணீர் குறித்து இந்த விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ளாராம் இதற்காக கண்டிப்பாக நயன்னை பாராட்டியே ஆகவேண்டும் .

இப்பகுதியில் படபிடிப்புகள் நிறைவு பெற்று நயன்தாரா கீழக்கரையிலிருந்து புறப்பட்டு செல்லும் போது அந்த பகுதி மக்களிடம் குடிநீர் வசதி எப்படி இருக்கிறது? என்று கேட்டு அறிந்து சென்றுள்ளார்.