தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள நயன், செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். பிகில், தர்பார் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து முடித்த நயன், அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்திலும் நடித்துமுடித்துவிட்டார். 

அடுத்ததாக சிறுத்தை சிவா, ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியாக உள்ள அண்ணாத்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். யார் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எந்தவொரு தகவலையுமே படக்குழு வெளியிடவில்லை. மேலும், அனைத்தையுமே மிக ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. 

இதையும் படிங்க: கோடி ரூபாய் சம்பளத்துக்காக... அப்பா வயது நடிகருடன் டூயட் பாட ஓகே சொன்ன அஞ்சலி...!

ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வக்கீல் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. சூப்பர் ஸ்டார் படம் என்பதால் தனது சம்பளத்தை கூட 20 சதவீதம் வரை நயன்தாரா குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நயன் நடிக்க உள்ள வக்கீல் கதாபாத்திரத்திற்கும், சூப்பர் ஸ்டாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லையாம்.

இதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..?

இதனால் கடுப்பான நயன்தாரா ஹீரோ கூட டூயட் பாடுற மாதிரியான கதாபாத்திரம் தான் தனக்கு வேண்டும் என்று சிறுத்தை சிவாவிடம் கறாராக கூறியுள்ளார். இல்லாத கேரக்டர எங்க இருந்து திணிக்கிறது என்ற குழப்பத்தில் உள்ள இயக்குநர் சிறுத்தை சிவா, பார்க்கலாம் என ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.