ஆர்.ஜே.பாலாஜி கதையில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிப்பதற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கன்னியாகுமரி சென்றுள்ளார். குமரியில் கால் எடுத்து வைத்த முதல் நாளே, காதலன் விக்னேஷ் சிவன் உடன் பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார் நயன். இதனையடுத்து தினந்தோறும் ஒவ்வொரு கோவிலாக சென்று பிரார்த்தனை செய்து வருகிறார். 

நேற்று சுசீத்திரத்தில் உள்ள தாணுமாலைய சுவாமி கோயில், நாகராஜா கோயில் ஆகிய கோவில்களில் சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, சாமிமலை தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலில் காதலர் விக்னேஷ் சிவன் உடன் தரிசனம் செய்தார். 

ஒவ்வொரு கோவிலிலும் நயன் தாராவுடன் சேர்ந்து, சட்டை போடாமல் சுற்றி வரும் காதலர் விக்னேஷ் சிவனின் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பய பக்தியுடன் கோவிலை சுற்றி வந்த நயன்தாரா, சுமார் ஒரு மணி நேரம் கோயிலில் அமர்ந்து ஏடு வாசிப்பையும் கேட்டார். ஏற்கெனவே தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த பிகில் படத்தில் சொல்லிக் கொள்ளும் படி எதுவும் இல்லாததால், பொங்கல் விருந்தாக வரும் தர்பார் படமாவது கைகொடுக்க வேண்டும் என கோவில், கோவிலாக சென்று நயன்தாரா வேண்டிக்கொள்வதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.