தொலைக்காட்சிகளில் கலர், கலராக வரும் பிரபலங்களின் பேச்சை நம்பி சாமானியர்கள் ஏமாந்து போவது வழக்கம். ஆனால் அந்த விளம்பரங்களில் நடிக்கும் திரைப்பிரபலங்களே ஏமாற்றப்பட்டால்... எப்படி இருக்கும். அப்படி பிரபல நில விற்பனை நிறுவனத்தின் நிஜ முகம் தெரியாமல்,  திரையுலகின் பிரபலங்களும், தொழிலதிபர்களும் கோடிகளை ஏமாந்து நிற்கிறார்கள். 

 

இதையும் படிங்க: போலீசார் என்னை இரவு முழுவதும்... கதறி அழுது வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி... வனிதாவுக்கு மீண்டும் சவால்...!

ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் நில விற்பனையில் கொடி கட்டி நின்ற நிறுவனம் ஆதித்யா நில விற்பனை நிறுவனம். குறைந்த விலைக்கு நிலங்களை விற்பதாக கூவி கூவி இவர்கள் செய்த விளம்பரங்களை நம்பி பலரும் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கியுள்ளனர். இடையில் அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான கோட்டா ரெட்டிக்கும், அவருடைய உறவினரும் பிசினஸ் பாட்னருமான சுதிர் ரெட்டிக்கும் பிரச்சனை வெடித்ததை அடுத்து, பல மோசடிகள் வெளியே வர ஆரம்பித்துள்ளன. 

அதில் முக்கியமானது இந்த நிறுவனம் நீர் நிலைகளையும், புறம்போக்கு நிலங்களையும் குறைந்த விலைக்கு விற்பதாக கூறி மக்களிடம் விற்பனை செய்துள்ளனர். இந்த மோசடியில் சாமானியர்களை விட  திரைப்பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும், தொழிலதிபர்களும் அதிகம் சிக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: அழகில் அம்மாவையே ஓரங்கட்டும் ‘ரோஜா’ மதுபாலாவின் அழகிய மகள்கள்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்...!

2008ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரின் மனைவி ஆதித்யா நிறுவனத்திடம் இருந்து 6 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதேபோல் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா ஆகியோரும் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு விற்கப்பட்ட நிலங்கள் நீர் நிலைகள் மற்றும் புறம்போக்கு இடமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் கோடிகளை போட்டு நிலத்தை வாங்கிய தமிழ் சினிமாவின் “டாப் அண்ட் போல்ட்” நடிகைகளான இருவரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.