டயானா மரியம் குரியன் ஆகிய நயன்தாரா தென்னிந்திய திரை உலக ரசிகர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வாழ்த்துப்பதிவை அவரும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் கலந்து கட்டி காதல் ரசம் ததும்ப வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.

தனது அடுத்த ரிலீஸ் தலயுடனான ‘விஸ்வாசம்’ விரைவில் வெளியாகவிருக்கும் உற்சாகத்தில் இருக்கும் நயன், இதையடுத்து’கொலையுதிர் காலம்’,’ஐரா’,’சைரா நரசிம்ம ரெட்டி’ ’லவ் ஆக்ஷன் ட்ராமா என பல படங்கள் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கின்றன. மேலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார் .

இப்படி  தமிழ் சினிமாவின் ஒரே முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சில காலமாகவே லிவிங் டு கெதர் ஆக சென்னையில் வசித்து வரும் இவர்கள், ஒவ்வொரு விழாவின் போதும் இருவரும் புகைப்படங்கள் எடுத்து வலைத்தளங்களில் வைரலாக்கி விடுவது வழக்கம்.

அந்த வகையில், இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நயன் தாரா தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நயன் புத்தாடை உடுத்தி மிக லட்சணமாக கிறிஸ்மஸ் வாழ்த்துகளை வெளியிட, அடுத்த நயன்தாரா ஆக ஆசைப்படும் அமலாபாலின் கிறிஸ்மஸ் ஆடையைப் பாருங்கள்.