நடிகை நயன்தாரா முதல்முறையாக பவானி, யமுனா என்ற இரட்டை வேடத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஐரா'. முதல் முறையாக இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள, இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படு வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் டைட்டிலான 'ஐரா' என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இதற்க்கு படக்குழுவினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அதாவது 'இந்திரனின் வாகனமான ஐராவதம் ஒரு வெள்ளை யானை. யானைகள் அதன் அசாதாரணமான நினைவுத்திறனாலும், அறியும் திறனாலும் தன் வஞ்சத்திற்கு பழிதீர்த்து கொள்ளும் என்று படக்குழுவினர் டைடிட்லுக்கு விளக்கம் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து இந்த படத்தின் நயன்தாரா கேரக்டரும் தன்னுடைய அறிவுத்திறனால் எதிரிகளை புத்திசாலித்தனமாக பழிவாங்குவதே இந்த படத்தின் கதை என தெரிகிறது.

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவின் பவானி கேரக்டரின் கணவராக கலையரசன், நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.