நடிகை நயன்தாரா நடித்துள்ள 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளை வித்தியாசமாக நடத்தி வருகிறார்கள் படக்குழுவினர்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் முதல் சிங்கிள் 'மேகதூதம்' பாடல் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு, ஹிட் பாடலாக அமைந்தது. இதை தொடர்ந்து  இந்த வாரம், 'ஐரா' படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் மதன்கார்க்கி வரிகளில் உருவான இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த இரண்டாம் சிங்கிள் பாடல் குறித்து புதிர் போட்டுள்ளனர் படக்குழுவினர்.

அதாவது இந்த  பாடல் 'கா' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்றும், இந்த பாடல் தொடங்கும் வார்த்தையை கண்டுபிடியுங்கள் என்றும் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்துள்ளனர். 

இதனால் ரசிகர்ளும் மூளையை கசக்கி பிழிந்து,  "காதல், காலம், கானல், காகம், கானலி, காரணி, காயம், கானம், காரம், காவியா, காமம், காற்று, காட்சி, காரிகை என பல வார்த்தைகளை கூறினார். ஆனால் இவை அனைத்தும் தவறு என படக்குழுவினர் கூறிவிட்டதால், விட முயற்சியோடு சிலர் 'கா' வார்த்தையை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிகிறார்கள் ரசிகர்கள்.