Asianet News TamilAsianet News Tamil

Nayanthara 75: நயன்தாராவின் 75-ஆவது படமான 'அன்னபூரணி' ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள 'அண்ணபூரணி- The Goddess of Food' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.
 

nayanthara 75th film annapoorani release date announced
Author
First Published Oct 31, 2023, 11:25 PM IST

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி- The Goddess of Food’ டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். டிசம்பர் எப்பொழுதும் திருவிழா காலம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தின் நல்ல கதையம்சம் குடும்பப் பார்வையாளர்களை ஈர்க்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'அன்னபூரணி - The Goddess of Food' படம் சரியான திட்டமிடலோடு சரியான நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இனி ஒரு உசுரு போயிடக்கூடாது!! படப்பிடிப்பை அப்பறம் பாத்துக்கலாம்.. முதல்ல இதை பண்ணுங்க ஆர்டர் போட்ட அஜித்!

தமன் எஸ் இசையமைத்திருக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி நயன் ரசிகர்களை உச்சாகமாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios