இனி ஒரு உசுரு போயிடக்கூடாது!! படப்பிடிப்பை அப்பறம் பாத்துக்கலாம்.. முதல்ல இதை பண்ணுங்க ஆர்டர் போட்ட அஜித்!
படப்பிடிப்பை விட தன்னுடைய படத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம் என, தல அஜித் படக்குழுவினரிடம் கூறி மருத்துவமுகாம் நடத்த ஏற்பாடு செய்ய கூறியுள்ளாராம்.
நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது 'விடாமுயற்சி' திரைப்படம். இந்த படத்தை தடம் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். வில்லனாக ஆரவ் மற்றும் சஞ்சய் தத் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தை, பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது லைகா நிறுவனம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன் அஜர்பைஜானியின் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் அஜித் படக்குழுவினருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது சமீபத்தில், 'விடாமுயற்சி' படத்தில் பணியாற்றி வந்த கலை இயக்குனர் மிலன் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக படப்பிடிப்பிலேயே உயிரிழந்தார். இவரின் மறைவு ஒட்டு மொத்த படக்குழுவினரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிலன் நடிகர் அஜித்தின் நீண்ட கால நண்பர் என்பதால் அவரின் மறைவில் இருந்து இதுவரை அஜித் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், படக்குழுவினரிடம் அஜித் படத்தை விட ரொம்ப முக்கியம் நம் படத்தில் பணியாற்றுபவர்களின் ஆரோக்கியம். இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது.. எனவே, 'விடாமுயற்சி' படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் முதலில் மருத்துவமுகாம் நடத்த வேண்டும் என்கிற வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளாராம். லைகா நிறுவனம் எப்போதுமே, தொழிலாளர்களின் நலன் கருதும் நிறுவனமாக இருப்பதால், அஜித்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மருத்துவமுகாமுக்கு ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்டுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D