nayanthaara movie aram

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கிய 'அறம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா கேரக்டர் படம் தொடங்கி 20 நிமிடங்கள் கழித்தே அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

இதுகுறித்து கூறிய இயக்குனர் கோபிநயினார், 'இந்த படத்தின் திரைக்கதையின்படி நயன்தாரா கேரக்டர் 20 நிமிடங்கள் கழித்து தான் வருகிறது. 

ஆனால் நயன்தாரா நடிப்பது உறுதியானவுடன் நான் திரைக்கதையை மாற்ற முடிவு செய்தேன். இதை அறிந்து கொண்ட நயன்தாரா, என்னை தடுத்துவிட்டார். முதலில் இருந்த திரைக்கதையே இருக்கட்டும், அதுதான் இந்த படத்திற்கு சரியாக இருக்கும் என்று கூறியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் கேரக்டரில் நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் 'காக்கா முட்டை' புகழ் விக்னேஷ் - ரமேஷ், வேலு ராமமூர்த்தி, ஈ ராம்தாஸ், சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவவில், லால்குடி இளையராஜா கலை இயக்கத்தில், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில், பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகியுள்ளது.