9 உணர்வுகளை வெளிப்படுத்தும் நவரசமாய் வெளியானது சூர்யா - விஜய் சேதுபதி நடிக்கும் 'நவரசா' டீசர்!

9  இயக்குநர்கள் 9 வித்தியாசமான கதைகளை வைத்து அற்புதமான படைப்பாக உருவாகி வரும் வெப் தொடர் 'நவரசா'. இந்த வெப் தொடர் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
 

navarasa web series teaser will be released

9  இயக்குநர்கள் 9 வித்தியாசமான கதைகளை வைத்து அற்புதமான படைப்பாக உருவாகி வரும் வெப் தொடர் 'நவரசா'. இந்த வெப் தொடர் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நவரசா இணையதள தொடரை, இயக்குநர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் Qube Cinemas நிறுவனங்களுடன் இணைந்து, 9 இயக்குநர்கள், பல்வேறு நடிகர் நடிகைகளை வைத்து... மொத்தம் 9 பாகங்களாக இயக்கியுள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உட்பட ... மொத்தம் 9 இசையமைப்பாளர்கள் இந்த தொடர்களுக்கு இசையமைத்துள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

navarasa web series teaser will be released

சிரிப்பு, அழுகை, கோபம், பயம், வெட்கம், கருணை, அருவருப்பு உள்ளிட்ட 9 நவரசங்களையும் அடிப்படையாக வைத்து 'நவரசா' தொடர் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. 

navarasa web series teaser will be released

இயக்குனர் ரவீந்திரன் பிரசாத் இயக்கத்தில் சித்தார்த், பார்வதி, ராஜேஷ், பாலச்சந்திரன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்க, இயக்குநராக களமிறங்கியிருக்கும் அரவிந்த்சாமி இயக்கும் ஒரு பாகத்தில் நடிகர் ஸ்ரீராம் நடிக்கிறார். அடுத்தபடியாக நம்பியார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் மற்றும் ரேவதி ஆகியோர் நடிக்கின்றனர். 

navarasa web series teaser will be released

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஒரு பாகத்தில் பிரபல நடிகர் சூர்யா நடிக்கிறார். ஹலிதா ஷமீம் மற்றும் பிரியதர்ஷன் இயக்கத்தில் இரண்டு பாகங்களில் யோகி பாபு நடித்துள்ளார். பிரபல இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, பிரசன்னா மற்றும் பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு பாகத்தில் பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கின்றனர். இறுதியாக வசந்த் இயக்கும் பாகத்தில் அதிதிபாலன் நடித்துள்ளார். 

navarasa web series teaser will be released

முன்னணி இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள இந்த நவரசா வெப் தொடர், ஏற்கனவே நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில், ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்க பட்ட நிலையில், தற்போது நவரசங்களை இந்த தொடரில் நடித்துள்ள நடிகர்கள் வெளிப்படுத்தும் விதமாக, 'நவரசா' டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் இந்த வெப் தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள டீசர் இதோ... 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios