நாலு தேசிய விருதுகள் உள்பட பல்வேறு கௌரவங்கள் - ஜொலிக்கும் கமல்ஹாசன் ஆபீசை பார்த்து இருக்கிறீர்களா? வீடியோ இதோ!
Kamalhaasan Awards : கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துவரும் உலக நாயகன் கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவர் பெற்ற விருதுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளை கொண்டு வந்த கலைஞர்களில் மிக முக்கியமானவர் உலக நாயகன் கமல்ஹாசன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகத்தில் பயணித்து வரும் அவர் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். இருமுறை கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள உலக நாயகன் கமல்ஹாசன் "மூன்றாம் பிறை", "நாயகன்", "தேவர் மகன்" மாற்று "இந்தியன்" உள்ளிட்ட படங்களுக்காக நான்கு முறை தேசிய விருது வென்ற மாபெரும் நடிகர்.
மூன்று முறை ஆந்திர அரசு வழங்கும் "நந்தி விருதுகளையும்", 17 முறை ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றவர் இவர். சைமா, சிக்கா, ராஷ்டிரபதி விருதுகள், IIAS விருதுகள், மகுடம் விருதுகள், தமிழ்நாடு அரசு வழங்கும் மாநில விருதுகள் என்று பல்வேறு விருதுகளை வென்று முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.
இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் அலுவலகத்தில் அவர் பெற்ற விருதுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த அரிய காணொளி தற்பொழுது இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சினிமா என்ற சொல்லுக்கு விளக்கமாக திகழ்ந்து வருகின்றார் உலக நாயகன் என்றால் அது மிகையல்ல.
சுமார் 36 ஆண்டுகள் கழித்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள், பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகவுள்ள "Thug Life"என்கின்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை திரிஷா, நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.