விஜய் சேதுபதி எப்போதும் ரசிகர்கள் விருப்புவது போல, தரமான படங்களாக தான் பார்த்து பார்த்து நடித்து கொண்டிருக்கிறார் .
அதே போல் சில படங்களையும் தானே தயாரித்து நடித்தும் வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மேற்கு தொடர்ச்சி மலை, இப்படத்தை லெனின் பாரதி இயக்கியுள்ளார்.
மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் , இந்த படம் கேரளாவில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ள, சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனால் விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியில் திளைத்திருக்கும் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் பாலா பிரபலங்களும் அவருக்கு வாஸ்த்து தெரிவித்து வருகின்றனர் .
நியூஸ் பாஸ்ட் சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம்....... மேலும் வளர வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.
