தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கியுள்ள, நடிகை கொன்கோனா, முறைப்படி தற்போது விவாகரத்து பெறுவதற்காக மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கொன்கோனா சென் சர்மா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர் ஷோரேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்கப்பட்ட மனக்கசப்பு காரணமாக, கணவரை விட்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்.

இந்நிலையில் இருவரும்  பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெறுவதற்காக அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்துள்ளனர். சட்ட முறைகள் முடிந்தவுடன், இருவருக்கும் ஆறு மாதங்களில் விவாகரத்து வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கணவர் ரன்வீருடன் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் தங்களுடைய 6 வயது மகன், ஹாரூனிற்காக இருவரும் நட்பு ரீதியான உறவில் இருப்போம் என இருவருமே தெரிவித்துள்ளனர். ஹாரூன் தற்போது அவருடைய தாய் கொன்கோனா சென்னின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொன்கோனா மற்றும் ரன்வீர் Traffic Signal, Mixed Doubles ஆகிய படங்களில் இணைத்து நடித்த போது காதலிக்க துவங்கி பின் திருமணமும் செய்து கொண்டனர். 

கொங்கோனா இதுவரை இரண்டு தேசிய விருதுகள் மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.  Lipstick Under My Burkha படத்தில்  நடித்ததற்காக சர்வதேச விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.